தவெக எழும்பூர் வேட்பாளர் ராஜ்மோகன் மீது போலீசார் வழக்கு பதிவு  – Kumudam

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களும் வீதி வீதியாக சென்று வாக்காளர்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

சூளை அங்காள பரமேஸ்வரி கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ பதிவு செய்து யூட்யூப் வலைதளத்தில் பதிவேற்றியது தொடர்பாக த.வெ.க எழும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜமோகன், த.வெ.க ஊடகப்பிரிவு நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட், த.வெ.க எழும்பூர் பகுதிச் செயலாளர் ஓட்டேரி நந்தா ஆகிய மூவர் மீது வேப்பேரி போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.

கோவில் கருவறை வரை சென்று வீடியோ பதிவு செய்து யூட்யூப் தளத்தில் பதிவேற்றியதால் கோவில் EO கங்காதேவி என்பவர் அளித்த புகாரில் வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. ஏற்கனவே பிரசாரத்தின் போது ராஜ்மோகன் மீது பணத்தை வீசிய பெண் நிர்வாகி மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது. 

Source link