தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தலுக்கு படுஜோராக தயாராகி வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் தொடங்க இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில், வேட்பாளர்கள் நேர்காணல் கட்சிகள் நடத்தி வருகின்றன. ஆனால் தவெகவில் ஒருமுறை மட்டுமே வேட்பாளர் நேர்காணலை விஜய் நடத்தி இருந்தார்.
இதற்கு பிறகு வேட்பாளர் நேர்காணல் நடைபெறவில்லை. இதற்கு காரணம் தவெகவில் இருக்கும் அதிகா மையங்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், அருண்ராஜ் என ஆளுக்கொரு வேட்பாளர் லிஸ்ட் விஜயிடம் கொடுக்கிறார்கள். போதாத குறைக்கு ஜான் ஆரோக்கியசாமியும் தனது பங்கிற்கு சில வேட்பாளர்களை பரிந்துரை செய்து இருக்கிறார். அதுமட்டுமின்றி, ஒருவர் கொடுக்கும் வேட்பாளர் மீது மற்றொருவர் புகார்களை அள்ளி வீசுகிறார்களாம்.
இதனால் உத்தேச பட்டியலில் இருப்பவர்களில் யார் சொல்வதுதான் உண்மை, யாருக்கு தொகுதியில் செல்வாக்கு உள்ளது என கள நிலவரம் தெரியாமல் விஜய் தவித்து வருகிறாராம். இதன் காரணமாகவே வேட்பாளர் தேர்வு, எப்போது பிரச்சாரத்துக்கு போவது, எப்போது மக்களை சந்திப்பது என்று நிர்வாகிகள் தெரியாமல் தவித்து வருகிறார்களாம்.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை டிடியாக எடுத்து கொடுக்கும்படி தவெக தலைமை வலியுறுத்துகிறாதாம். இதனால் ஆரம்பகட்டத்தில் இருந்து ரசிகர் மன்றத்தில் இருந்து கட்சி நிர்வாகியாக இருக்கும் பலரும் திணறி வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி, தவெகவில் இணைந்த மாற்றுகட்சியினர் பலர், தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் வேண்டும என பல்க்காக தொகுதிகளை புக் செய்து வருகிறார்களாம். தொகுதிக்கே அறிமுகமில்லாத பலரும் சீட்டை உறுதி செய்துள்ளதால், நிர்வாகிகள் விரக்தியில் உள்ளதாகவும் தகவல் பரவுகிறது.

