கடலூரில் தமிழக வெற்றிகழகம் சார்பில் நடைபெற இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தவெக விஜய் பிரச்சாரம்
சென்னையில் பெரம்பூர் மற்றும் கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கத்தில் பரப்புரைக்கு காவல் துறையினர் ஒரு மணி நேரமே வழங்கியதால் அந்த பரப்புரை கூட்டத்தை விஜய் ரத்து செய்தார். இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தை தென் மாவட்டங்களில் வலுப்படுத்தும் விதமாக தன்னுடைய அடுத்த கட்ட பிரச்சாரத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்த திட்டமிட்டிருந்தார்.
தூத்துக்குடியில் நடந்த விஜயின் ரோடு ஷோ
அதன்படி திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தூத்துக்குடி ,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரத்தை நடத்தினார். குறிப்பாக தூத்துக்குடியில் நடந்த விஜயின் ரோடு ஷோ அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ள விஜய் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் காலதாமதமாக வந்ததால் காரைக்குடியில் விஜய் பேசாமலேயே சென்றார். இது அவர்களின் தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
விஜய் கடலூர் பிரச்சாரம் ரத்து
அந்த வகையில், இன்று கடலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென்று ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தை விஜய் என்றும் ரத்து செய்ததால் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
