தவெக தொண்டர்களின் கையை பூட்ஸ் காலால் உதைத்து தள்ளிய பவுன்சர்கள்.. கண்டுகொள்ளாத விஜய்..! பதற வைக்கும் காட்சி..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. இந்த இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் பெரம்பூர், திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. பின்னர் வேறு இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்யவில்லை..

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் தவெக தலைவர் விஜய் பெரியளவில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.. இதை தொடர்ந்து நெல்லையில் நேற்று முன் தினம் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார்..

விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பதாக தவெகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.. விஜய்யின் பொம்மையை வைத்து தவெக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்..

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்ற அவர் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக காரைக்குடி வழியாக செல்கிறார்.. அப்போது வழி நெடுகிலும் தவெக தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.. பூக்களை தூவியும், மாலைகள் போட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்..

எனினும் வழக்கம் போல் தவெக தொண்டர்கள் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் காரைக்குடி நோக்கி சென்ற விஜய் வாகனத்தை அவரின் ரசிகர்கள் பின் தொடர்ந்து சென்றனர்.. விஜய் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தவர்கள் இருவர் விபத்தில் சிக்கினர்..

இதை தொடர்ந்து விஜய் பிரச்சார வாகனத்தில் தொங்கிய படி பல தொண்டர்கள் சென்றனர்.. ஆபத்தை உணராமல் தவெக தொண்டர்கள் விஜய் வாகனத்தில் தொங்கிக் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஆனால் இதை விட அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியது.. விஜய் பிரச்சார வாகனத்தில் தொங்கிக் கொண்டு சென்ற தவெக தொண்டர்களின் கைகளை விஜய்யின் பவுன்சர்கள் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும், ப்ரீஃப் கேஸ் தட்டியும் விடுகின்றனர்.. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

இந்த வீடியோவை பார்த்த பலரும் தவெக தொண்டர்களை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்..

Source link