தவெகவிலிருந்து வெளியேறியதிலிருந்து தொடர் மிரட்டல்கள் வருவதாக நடிகை ரஞ்சனா நாச்சியார் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதற்கு அக்கட்சியில் நிர்வாகியாக செயல்பட்டு வந்த ரஞ்சனா நாச்சியார் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் விஜயை கடுமையாக விமர்சித்து, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அறிக்கை ஒன்று வெளியிட்டார். இந்த சம்பவம் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியிலிருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மார்ச் 19ஆம் தேதி திமுகவில் இணைந்தார்.
2026 தேர்தலில் தவெக தனித்து தான் போட்டி என அறிவிப்பு
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து வெளியேறியதில் இருந்து தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக பரபரப்பு குற்ற சாட்டை முன்வைத்துள்ளார்.மேலும் தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,கடந்த வாரம் தமிழக வெற்றிக்கலாகும் கட்சியிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்து இருக்கிறேன். தவெகவில் இருந்து வெளியேறிய நாள் முதல் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்ந்து அவதூறுகள் பரப்பப்பட்ட வருகிறது.
ஆபாச வார்த்தைகள் மூலம் பேசுவது, என்னுடைய புகைப்படங்களை மாஃப் செய்து போடுவது, தொலைபேசி மூலம் தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டது.மேலும் உரிய ஆதாரத்துடன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். தன் மீது அவதூறுகளை பரப்புவது விர்ச்சுவல் வாரியஸ்(Virtual Warriors) தான் . இதனை வாய்ஸ் ஆப் காமன் என்ற ஒரு நிறுவனத்தை ஆதவ் அர்ஜுனா நடத்தி வருகிறார். விஜய் அறிமுகம் செய்து வைத்த அந்த டீம்தான் விர்ச்சுவல் வாரியஸ். எந்தவித பயமும் இல்லாமல் விஜய் புகைப்படத்தை பயன்படுத்தி அவதூறுகளை பரப்புவதும் அவர்கள் தான் என்று குற்றம் சாட்டினார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கட்சி சார்ந்த நிர்வாகிகளும் சரி, அக்கட்சித் தலைவர் விஜய்யும் சரி கண்டிக்கவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வெளியே வரும் பெண்களை அவதூறு மற்றும் ஆபாசமாக பேசுவதை ஒரு கலாச்சாரமாக வைத்துள்ளனர். மேலும் தவெக எதிராக யாரேனும் கருத்து தெரிவித்தால் அவர்களை மிரட்டல் விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயலாற்றி வந்திருக்கிறேன் அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு நான் அக்காவாக தெரிந்தேன். பின்னர் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு இவ்வளவு அவதூறுகள் மற்றும் ஆபாசமாக பேசுவார்கள் என்று சொன்னால் அதை தட்டிக் கேட்கவும் கண்டிக்கவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு உரிமை உண்டு.இதற்க்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒரு வீடியோவாகவும் அல்லது ஆடியோவாகவோ அல்லது ஒரு கடிதத்தை வெளியிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
ரஞ்சனா நாச்சியார் தமிழ் சினிமாவில் பிரபலமாக அறியக்கூடியவர். திரைப்பட இயக்குனர் பாலாவின் அண்ணன் மகள் ஆவார். அரசியல் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பாஜகவில் இணைந்தார். பின்னர் அகட்சியிலிருந்து வெளியேறி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். அப்போது கட்சியில் உட்கட்சி பூசலை விமர்சிக்க தொடங்கினார் மேலும் பெண்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து விஜய் மற்றும் சங்கீதா விவகாரத்தை சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
