அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
அதேபோல், அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக,அதிமுக, நாதக,தவெக உள்ளிட்ட கட்சிகளிடையே தற்போது நான்கு முனைப்போட்டிகள் உருவாகியுள்ளன.பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு முடிவடைந்துள்ளது.அதன்படி,
அ.தி.மு.க கூட்டணி தொகுதி பங்கீடு
- பா.ஜ.க. -27
- பா.ம.க- 18
- அ.ம.மு.க-11
- த.மா.கா -5
- இந்திய ஜனநாயக கட்சி -2
- தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்-1
- மற்றும் புரட்சி பாரதம்- 1
நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?
தொகுதியை பெற்றுள்ளது. கூட்டணியின் தலைமை கட்சியான அ.தி.மு.க. மீதமுள்ள 169 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் அதிமுக தலைமையில் அங்கம் வகிக்கும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகள்
- ஈரோடு மேற்கு
- ராணிப்பேட்டை
- கிள்ளியூர்
- ஒட்டன்சத்திரம்
- கும்பகோணம்
இதனைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார் பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ஜீ.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி
தமாகா வேட்பாளர் பட்டியல்
- ஒட்டன்சத்திரம் – விடியல் சேகர்
- ஈரோடு மேற்கு – எம்.யுவராஜா
- கிள்ளியூர் – ஜெ.நிவின் சைமன்
- கும்பகோணம் – எம்.கே.ஆர்.அசோக் குமார்
- ராணிப்பேட்டை – வி.எம்.கார்த்திகேயன்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், இந்தியாவில் மக்கள் அதிகம் விரும்பக்கூடிய கட்சியாக பாஜக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று அடுத்த முறை நாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிடுவதை எனக்காகக் கொண்டுள்ளோம்.
மீண்டும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல்
மேலும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கும் வகித்துள்ளதால் பாஜக தாமரை சின்னத்தில் இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். ஆனால் தேர்தல் ஆணையம் மீண்டும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்தது.
அதனால் தான் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று தெரிவித்தார். முன்னதாக, பாஜக கூட்டணியில் இருக்கக்கூடிய சிறிய கட்சிகளுக்கு தாமரைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் பாஜகவுக்கு வலுப்பெறும்.
திமுகவுக்கு எதிராக அதிமுக தொகுதிகளில் காய்நகர்த்து அதிமுக
மேலும்,எந்தெந்த தொகுதிகளில் ஆதரவு அதிகம்.எந்த தொகுதியில் ஆதரவு இல்லை என்பதை எளிதாக தெரிந்துக் கொள்ள முடியும் என்று கூறினார். இதனால், தமிழக அரசியல் களம் சூடுப்பிடித்து உள்ளது. மேலும் இந்த முறை திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக மற்றும் பாஜக இருந்து வருகிறது. இதனால், அதிமுக திமுக பலம் இல்லாத தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
