தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரெயில் சேவையில் முக்கிய மாற்றம்

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் ரெயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் பகுதிநேரமாக பேரணி-விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் பகுதிநேரமாக விழுப்புரம்-பேரணி இடையே ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து நாளை (18.03.2026) காலை 9.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வரும் பயணிகள் ரெயில் பகுதிநேரமாக விக்கிரவாண்டி-விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் பகுதி நேரமாக விழுப்புரம்-விக்கிரவாண்டி இடையே ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link