மும்பை,
மராட்டிய மாநிலம், ஜல்னா மாவட்டம் சிர்சாவாடி கிராமத்தை சேர்ந்தவர் நிகில் வாக்மரே (வயது25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே நட்பு இருந்து வந்தது. அந்த சிறுவன் சமீபத்தில்தான் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்திருந்தார்.
தனது தாய்க்கும், நண்பர் நிகிலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக அந்த சிறுவன் நீண்ட நாட்களாக சந்தேகப்பட்டு வந்தான். மேலும், நிகில் தனது தாய்க்கு அடிக்கடி செல்போனில் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததும் சிறுவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சிறுவனும், நிகில் வாக்மரேவும் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது போதையில் நிகில் மயங்கியபோது, சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தான். இதில் சம்பவ இடத்திலேயே நிகில் உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் ஊரை விட்டு தப்பியோட முயன்ற சிறுவனை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் இதுகு றித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிறுவனிடம் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
