தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தல் – 2 பேர் கைது

சென்னை,

போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் சென்னை வானகரம் காவல்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டபோது, சர்வீஸ் சாலையில் காரில் வந்த 2 பேரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையின்போது, அவர்களிடம் இருந்து உயர்ரக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போதைப்பொருளை கடத்தி வந்த தினேஷ் மற்றும் மெக்கலன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து போதைப்பொருள், பணம் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு போதைப்பொருளை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link