தாலிக்கு தங்கம் முதல் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வரை… அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன? – from gold for thali to 10% reservation what are the key highlights of aiadmk election manifesto
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், பெண்களையும் சாமானிய மக்களையும் கவரும் வகையில் பல அதிரடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்
விலைவாசி உயர்வை சமாளிக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித் தொகை.
பெண்கள் நலன் காக்க ‘குடும்ப விளக்கு திட்டம்’.
மகளிரைப் போல, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயண திட்டம்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
முதியோர் உள்ளிட்டவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்வு.
வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி.
விவசாய உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.