டெல்லி,
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமாக எக்ஸ் வலைதளம் (டுவிட்டர்) திகழ்கிறது. இந்த சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியுள்ளது. மாலை 7 மணி முதல் வலைதளம் முடங்கியுள்ளது.
பயனாளர்களின் எக்ஸ் வலைதள முகப்பு பக்கம், பிற எக்ஸ் வலைதள கணக்குகளை காண்பிக்கும் பக்கம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் முடங்கியுள்ளது. இதனால் பயனாளர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
