தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் இன்று நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள கே டி சி நகரில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “
என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.. உங்க மகன், உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க தோழன், உங்க நண்பன், உங்க விஜய் உங்களை தேடி வந்திருக்கிறேன்.. இந்நேரம் திமுக கையில் முழு பவரும் இருந்திருந்தால், ஸ்டாலின் சார் கையில் முழு பவரும் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது.. ஏதாவது முட்டுக்கட்டை போட்டிருப்பார்.. அதிகாரமில்லாத முதல்வராக ஸ்டாலின் சார் இருப்பதால் நம்மால் எளிதாக வர முடிந்தது..
என் மீது திமுகவினர் உள்ளிட்ட பலரும் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்.. திமுக கூட்டணி – பாஜக கூட்டணியும் ஒன்று தான்.. இரண்டு கூட்டணிக்கும் ஒரே நோக்கம் தான்.. உங்களுக்காக நல்லது செய்ய இந்த விஜய் வந்துவிடக் கூடாது என்பது தான் அவர்களின் நோக்கம்..
அவர்கள் செய்த ஊழலை நான் லிஸ்ட் போட்டு சொன்னதால் என் மீது செம கோபத்தில் இருக்கின்றனர்.. அடுத்த முறை மீண்டும் ஆட்சிக்கு முடியாத சூழலை நீங்களே உருவாக்கி விட்டனர்.. இந்த கூட்டணி கணக்கு என்பதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை. கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து போய் உள்ளது.. ஒட்டுப்போட்டு கூட்டணியை தக்க வைத்துக் கொண்டுள்ளது திமுக.. கூட்டணி தலைவர்களே அவர்களுக்காக ஓட்டுப்போட மாட்டார்கள் போல..
திமுக கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும் நம் மீது காண்டு.. அவர்கள் வீட்டிலேயே விசில் சத்தம் கேட்பதால் தான் அந்த காண்டு.. தமிழ்நாடு காங்கிரஸை பல கோடிகள் கொடுத்து ஸ்டாலின் சார் கையில் போட்டுக் கொண்டார்.. உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் தான் உள்ளது.. சிறுபான்மை மக்கள் விஜய் பக்கம் தான் உள்ளனர்.. இதனால் திமுகவும் பாஜகவும் கோபத்தில் உள்ளனர்..” என்று தெரிவித்தார்..
Read More : பரபரப்பு..! விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த தவெகவினர்..! அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்..!
