திமுகவில் யாரும் தொடர்ந்து இருமுறை ஆண்டதில்லை என்பதை உடைத்துக் காட்டுவேன் – மு.க.ஸ்டாலின்

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சை திலகர் திடலில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் தஞ்சாவூர் பிரசாரம் தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்-அமைச்சர் ‘தஞ்சையும் சொல்லிவிட்டது: உதயசூரியனுக்குத்தான் எங்க ஓட்டு!’ என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

“ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சராகும் யோகம் இல்லை” என ஜோசியம் சொன்னவர்களுக்கெல்லாம் 2021-ல் என் உழைப்பால் பதில் சொன்னேன். “திமுகவில் யாரும் தொடர்ந்து இருமுறை ஆண்டதில்லை” என்று அடுத்த கட்டுக்கதையை ஒப்பிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த முறை வென்றதைவிட அதிக தொகுதிகளில் வென்று, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு இதையும் உடைத்துக் காட்டுவேன்.

நான் கட்டங்களை நம்பியிருப்பவனல்ல; ‘முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ எனக் கடின உழைப்பை நம்பும் கலைஞரின் மாணவன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Source link