செங்கல்ப்பட்டு,
செங்கல்பட்டு, மறைமலை நகர் பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திமுக உருவாக்கிய தொழிற்சாலைகளின் கோட்டைக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். ஓப்பற்ற தலைவர் அண்ணா பிறந்த ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்துள்ளேன். டெல்லியின் ஆணவத்துக்கு அடிபணியாமல் கடும் வெயிலில் தேர்தல் வேலை பார்க்கும் உங்களுக்கு ஒரு சல்யூட்.
அண்ணா உருவாக்கிய தமிழ்நாட்டை காக்க ஆதரவு கோரி வருகிறோம். திமுக என்றாலே வளர்ச்சி தான், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டை சுற்று பார்த்தாலே தெரியும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் தொழிற்சாலைகள். தொழிற்சாலைகளை திமுக தான் கொண்டு வந்தது.மகிந்திரா, விப்ரோ உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் எல்லாம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டன.
திமுக ஆட்சியில் தலைநிமிர்ந்துள்ள தமிழ்நாடு தொடர்ந்து மீண்டும் அமையும் திமுக ஆட்சியில் தமிழ்நாடு புதிய உயரங்களை எட்டும்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டலும் களத்தில் இருப்பவர்கள்தான் திமுகவினர். கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவியது திமுக. அதிமுக அரசு கொள்ளை அடித்தது.கொரோனா காலத்தில் மக்கள் பணியின்போதுதான் ஜெ.அன்பழகனை நாங்கள் இழந்தோம்.
பழனிசாமி எப்போதும் அவதூறு மட்டுமே பேசுபவர், இப்போது என் மரணம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார்.
எல்லோருக்கும் மரணம், அதுபோல்தான் எனக்கும், ஆனால் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களுக்கு மரணமில்லை. காலை உணவு திட்டம், நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். இந்த ஸ்டாலின் கொண்டு வந்துள்ள திட்டங்களை மண்ணிலே புதைக்கிற துணிச்சல் ஒருத்தருக்கும் வராது.
இவ்வாறு அவர் கூறினார்.
