திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள்.. விசிக, தேமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்தெந்த இடங்கள்.. வெளியான பட்டியல் – list of 28 seats where congress will contest in dmk alliance

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தேர்வு செய்வது தொடர்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ், விசிக, தேமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின்
எதிர்கட்சியான அ திமுக கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கிவிட்ட நிலையில், அ திமுக எப்போது கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை அறிவிக்கும் என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இது சம்பந்தமாக கடந்த சில நாட்களாக திமுக தொகுதி பங்கீடு குழு தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் தற்போது திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் சம்பந்தமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள்

திமுக வரும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரம்மாண்ட கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் காங்கிரஸுக்கு தான் அதிகப்படியான தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த திமுக கூட்டணியில் 25 தொகுதிகளை பெற்ற நிலையில் இந்த முறை கூடுதாக 3 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக காங்கிரஸ் 28 தொகுதிகளில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.
கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களின் பட்டியல்
இந்நிலையில் இந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இது தொடர்பாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள்
அதன்படி உதகமண்டலம், சோளிங்கர், ஈரோடு கிழக்கு, கடலூர், அறந்தாங்கி, சிவகாசி, மயிலாடுதுறை, காரைக்குடி, திருவாடனை, குளச்சல், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், உசிலம்பட்டி, கிருஷணகிரி, மேலூர், சங்கரன்கோவில், கவுண்டம்பாளையம் மற்றும் தனி தொகுதிகளான ஸ்ரீபெரும்புதூர், பொன்னேரி, துறையூர், ஆத்தூர், ஊத்தங்கரை ஆகிய 28 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் 16 தொகுதிகளில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளன. இந்த இடங்களை திமுகவிடம் கேட்டு பெற்றுள்ளதாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். அதே நேரம் கடந்த முறை வென்ற தென்காசி, விருத்தாச்சலம் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்காக காங்கிரஸ் விட்டு கொடுத்துள்ளது. இதில் விருத்தாச்சலம் தேமுதிக கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்
மேலும் தருமபுரி, விருதுநகர், சேலம் மேற்கு, போளூர், பல்லாவரம், திருத்தணி, ஓமலூர், மயிலம் மற்றும் குடியாத்தம் தனி தொகுதி ஆகியவை தேமுதிகவுக்கு வழங்கப்பட்டுள்ளன. வரும் சட்டமன்ற தேர்தலுக்காக முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து தேமுதிகவுக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் முரசு சின்னத்தில் தேமுதிக போட்டியிட உள்ளது. பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன் ஆகியோரும் இந்த தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள் என எதிரோபார்க்கப்படுகிறது.
விசிக போட்டியிடும் இடங்கள்
அதே போல் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு காட்டுமன்னார்கோவில், செய்யூர், அரக்கோணம், திண்டிவனம், பண்ருட்டி, கள்ளக்குறிச்சி, பெரியகுளம், திருப்போரூர் ஆகிய எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் சிபிஐ கட்சிக்கு தளி, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்புறைப்பூண்டி மற்றும் சிபிஎம் கட்சிக்கு பத்மநாபபுரம், கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை, பழனி மற்றும் திருவொற்றியூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.