திமுக கூட்டணியில் மணப்பாறை தொகுதியை பெற போட்டா-போட்டி

சென்னை,

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து திமுக இன்று ஆலோசனை நடத்துகிறது. காங்கிரஸ், விசிக, தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இன்றைக்குள் அனைத்து கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதி? என்பது இறுதி செய்யப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை முறுக்குக்கு பேமஸ் என அனைவருக்கும் தெரியும். ஆனால், இப்போது மணப்பாறை தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையேயும் பேமஸ் ஆகியுள்ளது. இந்த முறை, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., தே.மு.தி.க., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மணப்பாறை தொகுதியை கேட்டு மல்லுக்கு நிற்கின்றன.

கடந்த 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில், 2011-ம் ஆண்டு காங்கிரஸ், 2016-ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 2021-ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சி என தி.மு.க. கூட்டணி கட்சிகளே போட்டியிட்டு வருகின்றன. எனவே, இந்த முறை, கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க.வே போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியினர் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

Source link