சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்விவரம் பின்வருமாறு:-
1. காட்டுமன்னார்கோவில் (தனி) – திருமாவளவன்
2. செய்யூர் (தனி) – சிந்தனைச்செல்வன்
3. திருப்போரூர் – பன்னீர்தாஸ்
4. அரக்கோணம் (தனி) – எழில் கரோலின்
5. திண்டிவனம் (தனி) – வன்னியரசு
6. பெரியகுளம் (தனி) – சக்திவேல்
7. கள்ளக்குறிச்சி (தனி) – மாலதி
8. பண்ருட்டி – அப்துல் ரகுமான்
