திமுக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இன்று தேநீர் விருந்து அளிக்கிறார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் – 28, தே.மு.தி.க. – 10, விடுதலை சிறுத்தைகள் – 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 5, இந்திய கம்யூனிஸ்ட் – 5, ம.தி.மு.க. – 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 2, மனிதநேய மக்கள் கட்சி – 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 2, முக்குலத்தோர் புலிப்படை – 1, மனிதநேய ஜனநாயக கட்சி – 1, எஸ்.டி.பி.ஐ. – 1, தமிழர் தேசம் கட்சி – 1 என கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

164 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டு, பிரசாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது.இன்று வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மு.க. ஸ்டாலின் இன்று தேநீர் விருந்து அளிக்கிறார்.

இந்த தேநீர் விருந்தின் போது, தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாளை முதல் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link