மதுரை,
மதுரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக கூட்டணியுடன் தேமுதிக இணைந்தி ருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த கூட் டணியை மூழ்கும் கப்பல் என்று எதிர் அணியினர் கூறுகின்றனர். உண் மையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி நீர் மூழ்கி கப்பல் கூட்டணி. இதனை தேர்தல் வெற்றிக்கு பின்னர் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தெரிந்து கொள்ளும்.
வெனிசுலாவில் கொள்ளையடித்து அமெரிக்கா, விற்பனை செய்யும் எண்ணெயை இந்தியா வாங்கக்கூடாது. ரஷியா, ஈரான், அரபுநாடுகள் அனைத்தும் எண்ணெய் தருகின்றன. ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தில் திருப்பூரை இணைக்க வேண்டும். 500-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளில் நவீன தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
டாஸ்மாக் பணியாளர்கள், மாநகாராட்சி கொசு மருந்து தெளிக்கும் பணியாளர்கள், நர்சுகள், அங் கன்வாடி பணியாளர்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். இவர்களின் கோரிக்கை குறித்து முதல்-அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். விஜய்யின் அரசியல் வருகை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தமிழர்கள் மத கலவரத்தை விரும்பாதவர்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதை நிரூபித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
