திமுகவில் இணைந்த பிறகு முதன்முறையாக தன்னுடைய சொந்த தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பிரச்சாரம்
அதன்படி, தமிழ்நாட்டிற்கு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுக தேர்தலுக்காக இதுவரை இல்லாத அளவிற்கு 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மாபெரும் கூட்டணியை உருவாக்கியுள்ளது. மேலும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவிற்கு நான்கு தொகுதிகளும், இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், கொ மா தே கா கட்சிகளுக்கு 2 தொகுதிகளும், ம.ம. க 2தொகுதிகளும், சிபி ஐ க்கு 5தொகுதிகளும் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விசிக மற்றும் தேமுதிகவிற்கு மட்டும் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை மீதமுள்ளது. இதற்கு இடையில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்பமானவர்கள் கடந்த மார்ச் 20 ஆம் தேதி விநியோகம் செய்யப்பட்டது.
போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி
மேலும் மார்ச் 6ஆம் தேதி விருப்ப மனு விநியோகம் முடிவடைந்தது. இதில் சுமார் 15,000 மேற்பட்டவர்கள் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தனர். அதன்படி, மார்ச் 17ஆம் தேதி முதல் நேர்காணலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 18 ஆம் தேதி கன்னியாகுமரி, மதுரை ,தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான விருப்ப மனு அளித்திருந்த வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் நடத்தினார்.
கோட்டைவிட்ட எடப்பாடி! தட்டி தூக்கிய திமுக! Explained
அப்போது அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். நேர்காணல் நடத்திய பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் அரியணை ஏறுவது உறுதி என்று தெரிவித்தார். மேலும் கட்சித் தலைமை திமுகவைத் தென் மாவட்டங்களில் வலுப்படுத்தப் பிரச்சாரங்களைத் தொடங்க வேண்டும் என்று கட்சித் தலைமை வலியுறுத்தியதாகக் கூறினார்.
மக்கள் மனநிலை என்ன?
மேலும் முதல்வர் மு .க. ஸ்டாலின் நடத்திய முதல் நேர்காணல் எப்படி இருந்தது என்று குறித்து செய்தியாளர் கேள்விக்கு? தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு பலவகையான நலத்திட்டங்களைச் செய்துள்ளது. மீண்டும் அவர்தான் முதலமைச்சராக வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர் விருப்ப மனு அளித்தவர்களிடம் முத்துக்களைக் கேட்டு வருகின்றனர்.
வெற்றி வாய்ப்பு குறித்து கட்சி அனைத்து நிலை பொறுப்புகளிலும் உள்ள நிர்வாகிகளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாகப் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். குறிப்பாக ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அவருடய தொகுதி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸுக்கு சொந்த தொகுதியில் எதிர்ப்பு அலை வீசுகிறது.இதனை திமுக எவ்வாறு எதிர்க்கொள்ள உள்ளதை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
