திமுக தேர்தல் அறிக்கையை இறுதி செய்யும் பணி தீவிரம்

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்ட குழு அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது.

துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, கோவி செழியன், எம் எம் அப்துல்லா டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட 12 கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு இன்று அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை இறுதிசெய்து தொடர்பான ஆலோசனை நடத்தி வருகிறது. தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேலாக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசித்து வருகிறது.

திமுக தேர்தல் அறிக்கை குழு பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பரிந்துரைகள் பெறப்பட்ட பின்னரே இந்த அறிக்கை தயார் செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.

Source link