திமுக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல்? – முழு விவரம்

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. அதன்படி திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணி கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் போட்டியிடும் 70 தொகுதிகள் பட்டியல் வெளியான நிலையில் தற்போது திமுக போட்டியிடும் 164 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

திமுக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் முழு விவரம்:-

கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்

சேப்பாக்கம் – உதயநிதி ஸ்டாலின்

காட்பாடி – துரைமுருகன்

மதுரவாயல் – காரப்பாக்கம் கணபதி

திருச்செந்தூர் – அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

பேராவூரணி – அசோக் குமார்

சங்கராபுரம் – உதயசூரியன்

Source link