திமுக மேல அப்படி என்ன கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய்.. இனிமேலும் வீர வசனம் பேசாதீங்க.. விளாசிய இயக்குனர் சேரன்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

நடிகர் விஜய்யின் தவெக முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது.. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறினாலும் எந்த கட்சிகளுக்கும் கூட்டணிக்கு வராததால் தவெக தனித்தே களமிறங்குகிறது.. சமீபத்தில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் விஜய் அறிவித்தார்.. அதன்படி பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்..

விஜய் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி உள்ளார்.. கட்சி தொடங்கிய போது திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் அறிவித்தார்.. எனினும் பாஜகவை பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்காமல் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.. அதிமுகவை ஒரு பொருட்டாகவே விஜய் மதிப்பதில்லை.. திமுக எதிர்ப்பு மட்டுமே விஜய்க்கு கை கொடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது..

இந்த நிலையில் விஜய்யின் இந்த விமர்சனம் பற்றி இயக்குனர் சேரன் கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன ப்ரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் .. அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள.. உங்க இருவருக்கும் என்ன ப்ரச்னைன்னு எங்களுக்கு தெரியல.. உங்க ரசிகர்களுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன்.. அது என்ன எப்ப வந்தாலும் ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி… அப்படி என்ன உங்களுக்கு திமுக மேல கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய்…

நாங்களும் சப்போர்ட் பன்றோம்.. சொல்லாம நீங்க மட்டும் சினிமா டயலாக் பேசுனா ஏன் ஓட்டு போடனும்னு மக்கள் கேக்குறாங்கள்ல.. இங்க ஐம்பது வருஷமா இருக்க கட்சிகள் மற்றும் பதினைந்து வருஷமா மக்களோட மக்களா களத்துல நின்னு போராடி, புதிய மாற்றத்தோடு தமிழகத்தை உருவாக்க மக்கள்கிட்ட வாக்கு சேகரிக்கும் கட்சிகள் எல்லாம் நிறைய இருக்கு.. எந்த விதத்துல நீங்க அந்த கட்சிகளை விட உயர்வு சொல்லுங்க…

எந்த போராட்டத்துல மக்களுக்காக மக்கள் கூட நின்னு இருக்கீங்க இங்க ரெண்டு கட்சிக்குத்தான் போட்டின்னு சொல்ல… மனசாட்சி இல்லைன்னா நீங்க எப்படி மக்கள் தலைவனா மாறுவிங்க விஜய்… உழைப்பை முதல்ல மதிங்க… உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்ல… இனிமேலும் மக்கள்க்கிட்ட வீரவசனம் மட்டும் பேசாம ஒழுங்கா உங்க கட்சியோட கொள்கை திட்டம் எல்லாம் எல்லா இடத்துலயும் பேசுங்க.. ஒவ்வொரு தொகுதிலயும் என்ன ப்ரச்னைன்னு அலசி ஆராய்ங்க… பொதுவா வீராவேசமா பேச இது அரட்டை அரங்கம் இல்லை… மக்கள் களம்… ஏற்கனவே நாங்க 50 வருடத்தை இழந்துட்டு இருக்கோம்.. இப்போ நீங்க வந்து ஆட்டத்தை கலைக்காதிங்க.. மறுபடியும் மக்கள் ப்ரச்னை உணராத முதல்வர் எங்களுக்கு வேண்டாம்…” என்று பதிவிட்டுள்ளார்..



Source link