திருச்சி-காரைக்குடி பயணிகள் ரெயில் தினசரி இயக்கம்

திருச்சி,

திருச்சி-காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் சேவை வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளின் எண் ணிக்கை அதிகரித்து வந்ததன் காரணமாக வாரத்தில் 6 நாட்கள் என்று இருந்த இந்த சேவையை தினசரி சேவையாக மாற்றி ரெயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி வண்டிஎண் 56831 திருச்சி-காரைக்குடி பயணிகள் ரெயில் வருகிற 21-ந் தேதி முதல் தினசரி சேவையாக இயக்கப் படும். வண்டிஎண் 56832 காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் வருகிற 22-ந் தேதி முதல் தினசரி சேவையாக இயக்கப்படும். இந்த ரெயில்சேவையின் வழக்கமான இயக்க நேரத்திலும், நிறுத்தங்களிலும் எந்தவித மாற்றமும் இருக்காது என திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link