திருச்சி ரெயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி,

திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பச்சேரா உத்தரவின் பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு சக்கர வர்த்தி மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில், திருச்சி ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ரெயில்வே நிலைய சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர் சுகுமாரன், திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் மாலை 4.30 மணி அளவில் திருச்சி ரெயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலைய நடை மேடை எண் 5-ல் புவனேஸ்வரில் இருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரெயில் வந்து நின்றது.

அந்த ரெயிலின் பின்பக்கத்தில் உள்ள பொதுப்பெட்டியில் கேட்பாரற்று ஒரு சூட்கேஸ் கிடந்தது. அந்த சூட்கேசை சோதனை செய்தபோது. அதில் தலா 2 கிலோ எடை கொண்ட 5 பாக்கெட்டுகள் என மொத்தம் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Source link