தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வருகின்றனர்.. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்..
இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். தவெகவினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திருத்தணி தொகுதி வேட்பாளராக தவெக தேசிய செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான சத்யகுமாரை விஜய் அறிவித்தார்.
அதன் பின்னர் திருத்தணிக்கு வந்த வேட்பாளர் நிர்வாகிகளை கண்டு கொள்ளாமல், எழுத படிக்க தெரியாதவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டாம் என அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லாமல் தவெக வேட்பாளர் சத்யகுமார் கோட்டாட்சியர் அலுவலம் சென்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால் தவெக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
திருத்தணி தவெக வேட்பாளர் சத்யகுமாரை மாற்றக் கோரி 60க்கும் மேற்பட்ட தவெகவினர் திருத்தணி ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வேட்பாளர் சத்யகுமார் சொந்த கட்சி வேட்பாளர்கள் யாரும் இன்றி ஒற்றை ஆளாய் மக்களிடையே வாக்கு சேகரித்து வருகிறார். டீ கடைகளிலும், சாலையில் செல்லும் மக்களிடமும் கை கூப்பி வாக்கு சேகரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திருத்தணி தவெக வேட்பாளரின் பரிதாப நிலை என எதிர்கட்சியினர் விமர்சித்தும் வருகின்றனர்.
Read more: கோடையில் உடலை குளிர்விக்கும் சப்ஜா விதைகள்.. இவ்வளவு நன்மைகள் இருக்கா..?
English Summary
The pathetic condition of the Tiruttani TVK candidate.. His own party executives did not come and he collected votes alone..!
