திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக் தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இன்று முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை தினம், வருகின்ற 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 14-ம் தேதி (தமிழ்புத்தாண்டு) ஆகிய 3 நாட்களில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மேற்கண்ட 3 நாட்களில் மலைக்கோவில் மேல் ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இட வசதிக்கேற்ப கார்கள் இயக்கப்படும். மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவில் மேல் செல்ல அனுமதிக்கப்படும்.
