திருநெல்வேலி: கஞ்சா விற்ற 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், வெங்கடேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் ரதிஷ் (வயது 36) மற்றும் மானூர், பல்லிக்கோட்டையைச் சேர்ந்த கோபால் மகன் முத்துராமலிங்கம்(31) ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதன் பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 2 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

Source link