திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெயில்கள், அரசு பஸ்கள், தனியார் வாடகை வாகனங்கள், சொந்த வாகனங்களில் திருப்பதிக்கு வந்தனர். திருப்பதி அலிபிரி டோல்கேட்டில் ஒவ்வொரு வாகனமும் முழுமையாகச் சோதனை செய்யப்பட்ட பின்னரே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட் டன.
சோதனையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சோதனை முடிந்ததும், வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. சோதனைக்காக ஏராளமான வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. வாகன நெரி சலை பல பக்தர்கள் தங்களின் செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தநிலையில் நேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம் பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக் கும் சிலோதோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தேதி. நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட்” டோக்கன்கள் இல்லாமல் சென்ற பக்தர்கள் 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ரூ.300 கட்டணத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஆனது. டைம் ஸ்லாட் டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 6 மணி நேரம் ஆனது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிக எண்ணிக்கையில் வந்ததால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நீடிக்கும். என தேவஸ்தான அதிகாரிகள் தெரி வித்தனர்.
ஒருநாள் உண்டியல் காணிக்கை
திருப்பதியில் நேற்று முன்தினம் 85 ஆயிரத்து 132 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 38 ஆயிரத்து 855 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 62 லட்சம் ஆகும்.
