திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 82 ஆயிரத்து 838 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 94 லட்சம் ஆகும்.
