திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது விபத்து; ஒரே குடும்பத்திலுள்ள 5 பேர் பலி

சித்தூர்

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட ஒரு குடும்பத்தினர் காரில் புறப்பட்டு சென்றனர். அவர்களுடைய கார், ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் பாலமனேரு பகுதியருகே இன்று காலை வந்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது.

Also Read
2028 டி20 உலக கோப்பையிலும் விளையாடுவேன்: கிளென் மேக்ஸ்வெல் நம்பிக்கை

திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது விபத்து; ஒரே குடும்பத்திலுள்ள 5 பேர் பலி

இந்த விபத்தில் ஒரே குடும்பத்திலுள்ள 5 பேர் உயிரிழந்தனர். அவர்கள் மோகன்தாஸ், நாகராஜா ராவ், குஸ்மா, ஜெயந்தி, பூஜா என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். கார் விரைவாக சென்றுள்ளது என்றும் மற்றும் கார் ஓட்டுநர் தூக்க களைப்பில் இருந்திருக்க கூடும் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Source link