திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்; ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் திசைதிருப்புகிறது – சந்திரபாபு நாயுடு

அமராவதி,

கடந்த 2024 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின்போது, ​​முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பது ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை தயாரிப்பதற்கு தரமற்ற பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் விலங்கு கொழுப்புகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கோடிக்கணக்கான இந்துகளின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாக அப்போதைய ஆந்திர மாநில எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த குழுவினர் தங்கள் விசாரணையை நிறைவு செய்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தங்கள் மீதான குற்றத்தை திசைதிருப்ப பார்க்கிறது என ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வினுகொண்டா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

“திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் இருந்து தப்பிக்க, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்கள் மீதான குற்றத்தை மற்றவர்கள் மீது திசைதிருப்ப பார்க்கிறார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

லட்டுகளை தயாரிப்பதற்கு திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்ட நெய் சுத்தமானது இல்லை என சி.பி.ஐ. தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு கண்டறிந்தது. இந்த பிரச்சினை முந்தைய ஒய்.எஸ்.ஆர். அரசாங்கத்தின் பரம்பரைப் பிரச்சினை. ஏற்கனவே கடந்த 2019 முதல் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில் திருப்பதியில் கலப்பட லட்டுகள் பரிமாறப்பட்டன.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link