திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டுவது அவ்வளவு தவறா? – ரகுல் பிரீத் சிங் கேள்வி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ரகுல் பிரீத் சிங், இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் படங்கள் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், கவர்ச்சியிலும் கவனம் ஈர்த்து வருகிறார்.

Also Read
ரூ.35 கோடி வசூலித்த அபிஷன் ஜீவிந்த்தின் “வித் லவ்” திரைப்படம்
கோப்புப்படம்

குறிப்பாக பட விழாக்களில் அதீத கவர்ச்சி காட்டி அனைவரையுமே திக்கு முக்காட வைக்கிறார். திருமணத்துக்கு பிறகும் கவர்ச்சியில் அவர் கலக்குவது வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

Also Read
ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: நீல விளிம்புடன் வானில் இன்று சிவப்பு நிலா
கோப்புப்படம்

இதுகுறித்து ரகுல் பிரீத் சிங் கூறும்போது, ‘இங்கு நடிகைகளுக்கு திருமணமாகி விட்டாலே, அவர் அவ்வளவுதான். அவரது திரைப்பயணம் முடிந்துவிட்டது என்று பேசத் தொடங்கிவிடுகிறார்கள். திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு அத்தியாயம். அது எப்படி சினிமா பயணத்தின் தடையாக அமைய முடியும்?

Also Read
பிராக் சர்வதேச செஸ்: குகேஷ் மீண்டும் தோல்வி
கோப்புப்படம்

திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டுவது தவறு என்று எப்படி சொல்கிறார்கள்? கவர்ச்சி என்பது நடிப்பின் ஒரு பரிமாணம். அது எல்லை மீறினால்தான் தவறு. அளவான கவர்ச்சி தவறு இல்லை. இதுதெரியாமல் விமர்சிப்போரிடம் தான் உண்மையான பிரச்சினை இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Source link