சென்னை,
தவெக மகளிர் தின விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசியதாவது;
சிங்கப்பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். மகளிர் தினமான இன்று உங்களுக்கான முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கப் போகிறேன்.
மகளிருக்கான தேர்தல் வாக்குறுதி;
* பெண்கள், குழந்தைகள், முதியோரின் நலனின் அக்கறையில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்கென தனி இலகா உருவாக்கப்படும். இந்த இலாகா முழுவதும் எனது கட்டுப்பாட்டில் இருக்கும்
* நாம் அமைக்கப்போகும் ஆட்சியில் 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.2,500 வழங்கப்படும். இதில் மாநில, மத்திய அரசு ஊழியர்கள் இருக்கும் குடும்பத்துக்கு மட்டும் விதிவிலக்கு.
* அண்ணப்பூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்
* வெற்றிப்பயணம் திட்டத்தில் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்
* ரேஷன் கடைகள், பள்ளிகளில் பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்
* அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பெண்ணின் திருமணத்துக்கு தங்கம் ஒரு சவரன், தரமான பட்டு சேலை வழங்கப்படும்.
* பெண்களின் பாதுகாப்புக்கு ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும். சாதாரண உடையில் இருக்கும் அந்த பெண்கள் படை, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்.
* பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அஞ்சலையம்மாள் அதி விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.
* ஷேர் ஆட்டோ உட்பட அனைத்து பொது போக்குவரத்திலும் பெண்களின் பாதுகாப்புக்கு பாதுகாப்பு பட்டன்கள் அறிமுகம் செய்யப்படும்.
* தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசின் சார்பில் தங்க மோதிரம் வழங்கப்படும். அத்துடன், குழந்தைக்கு தேவையான பொருட்கள் பேபி வெல்கம் கிப்ட் மூலம் வழங்கப்படும்.
* சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடமே இருக்கக்கூடாது என்பதற்காக ஜீரோ டார்க் ஸ்பாட் உருவாக்கப்படும்.
* சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டத்தில் நிலுவையில் உள்ள கடன்கள் திருப்பி செலுத்தப்படும்.
இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். வரப்போகும் நாட்களில் இன்னும் பல அறிவிப்புகள் வரும்.
இதெல்லாம் ஓகே.. ஆனால் ஸ்டாலின் சார் செய்ய முடியாததை நீ எப்படி செய்வாய் என்று கேள்வி வரும். நம் மாநிலத்துக்கான மொத்த பட்ஜெட் ரூ.4.39 லட்சம் கோடி. அதில் 30 சதவீதம் ஸ்டாலின் சார் வரிக்கு போகிறது. அரசிடம் காசில்லை என்பது பொய். அரசின் பற்றாக்குறைக்கு ஊழலே காரணம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.”
இவ்வாறு அவர் பேசினார்.
