திருமணம் நிச்சயமான இளம்பெண் காதலனுடன் ஓட்டம்? – போலீசார் விசாரணை

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மநேரியை சேர்ந்த ஒரு விவசாயிக்கு 19 வயதில் மகள் உள்ளார். இந்த பெண்ணுக்கும், இவரது உறவுக்கார வாலிபருக்கும் கடந்த மாதம் 21-ந்தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கோப்புப்படம்
சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் தவெக – விஜய்

இதையடுத்து வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த ரூ.4.75 லட்சம் பணம், 5 பவுன் எடையுள்ள தங்க நகைகளையும் இளம்பெண் எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெண்ணின் தந்தை களக்காடு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது மகளும், அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்ததாகவும், அவருடன் சென்றிருக்கலாம் எனவும், மகளை உடனே தேடி கண்டுபிடித்து தருமாறும் குறிப்பிட்டுள்ளார்.

கோப்புப்படம்
இந்தியா ஒரு பாலைவன சோலை

இதனால் இளம்பெண் பணம், நகையுடன் காதலனுடன் ஒட்டம் பிடித்தாரா? என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link