சென்னை,
“தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக கருணாநிதி யின் ஊரான திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
அவர், திருவாரூர் தெற்கு ரத வீதியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட் டத்தில் திருத்துறைப்பூண்டி (இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர், திருவாரூர் (தி.மு.க.) வேட்பாளர் பூண்டி கலைவாணன், நன்னிலம் (எஸ்.டி.பி.ஐ.) வேட்பாளர், மன்னார்குடி (தி.மு.க.) வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா ஆகி யோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
1-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தி.மு.க. வேட்பாளர்கள் கே.என்.நேரு (திருச்சி மேற்கு). இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்), பாரிவள்ளல் (லால் குடி), கதிரவன் (மணச்சநல்லூர்), எஸ்.துரைராஜ் (ஸ்ரீரங்கம்), என்.எஸ்.கருணைராஜா (முசிறி), மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமது (மணப்பாறை), துறையூர் (தனி) காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
அன்றைய தினம் மாலை 5 மணியளவில் கரூர் மாவட்டம் ராயனூரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தி.மு.க. வேட்பாளர்கள் மொஞ்ச னூர் இளங்கோ (அரவக்குறிச்சி), ஆ.சி.எம்.தியாகராஜன் (கரூர்), சி.கே.ராஜா (கிருஷ்ணராயபுரம் (தனி) ), சூரியனூர் சந்திரன் (குளித் தலை) ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு திரட்டுகிறார்.
ஈரோடு, கோவை
2-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் ஈரோடு சித்தோட்டில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தி.மு.க. வேட்பாளர்கள் முத்துசாமி (ஈரோடு மேற்கு), தோப்பு வெங்கடாச்சலம் (பெருந்துறை), சிவபாலன் (அந்தியூர்), என்.நல்லசிவம் (கோபிச்செட்டிப்பாளையம்), சந்திரசேகர் (பவானி), ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர், பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கிறார்.
அன்றைய தினம் மாலை 5 மணியளவில் கோவை கொடிசியா மைதானத் தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் தளபதி முருகேசன் (சூலூர்), தமிழ்ச்செல்வன் (கோவை வடக்கு), செந்தில் பாலாஜி (கோவை தெற்கு), சபரி கார்த்திக்கேயன் (கிணத்துக்கடவு), சுதா கர் (வால்பாறை), சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர், பொள்ளாச்சி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து பிர சாரம் மேற்கொள்கிறார்.
தி.மு.க.வினருக்கு கண்டிப்பான உத்தரவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல வேண்டும். எனவே காலத்தின் அருமை கருதி எக்காரணத்தை கொண்டும் தி.மு.க.வினர் வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற் பாடு செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார் கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதற்கட்ட பிரசாரத்தில் 32 வேட்பாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.
