தி.மு.க. ஆட்சியின் மோசமான நிர்வாகம்: பிரதமர் மோடி விமர்சனம்

புதுடெல்லி,

தமிழக பா.ஜ.க. செயல்வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது தமிழக பா.ஜ.க. செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

13-ம் தேதியன்று மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்’ நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக பூத் கமிட்டி கூட்டம் நாளை (திங்கள் கிழமை) மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link