சென்னை,
தி.மு.க. கூட்டணியை எதிர்க்கும் வலிமையுள்ள கூட்டணி தமிழகத்தில் இன்னும் உருவாகவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
“தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை எதிர்ப்பதற்கு வலிமையுள்ள ஒரு கூட்டணி தமிழகத்தில் இன்னும் உருவாகவில்லை. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியாக இருந்தாலும் சரி, அல்லது நண்பர் விஜய் தலைமையிலான கட்சியாக இருந்தாலும் சரி, யாரும் இதுவரை கூட்டணி என்ற வடிவத்தைப் பெறவில்லை.
தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிரான வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டு மக்கள் மதசார்பற்ற அரசியல் சக்திகளுக்கே துணை நிற்பார்கள். நல்லாதரவை வழங்குவார்கள். தி.மு.க. தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற துணை நிற்பார்கள் என்று நம்புகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
