இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது வார் மற்றும் பதான் படங்களை இயக்கி புகழ் பெற்ற, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அனில் கபூர், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்பட பலர் நடிக்கின்றனர்.
ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு கிங் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.
இப்படத்துக்காக பாலைவனத்தில் அனில் கபூர், சுஹானா கான் பங்கேற்கும் ஆக்சன் காட்சியை படமாக்க இருந்தனர். வரும் 9-ம் தேதி முதல், ஒரு வார காலம் அங்கு படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருந்தனர். ஐக்கிய அரசு அமீரகம் அதற்கான அனுமதியை வழங்கி இருந்தது.
இந்நிலையில், மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் பதற்றம் காரணமாக இப்போது அத்திட்டத்தை படக்குழு ரத்து செய்துவிட்டது. அக்காட்சிகளை மும்பையின் விலே பார்லே பகுதியில் செட் அமைத்து படமாக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது.
