துறைமுக தொகுதியில் திருப்பம் வருமா?அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ தீவிர பிரச்சாரம்- சேகர் பாபுவுக்கு சவால்! – aiadmk campaign north chennai royapuram mano campaigns intensively

தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களை எஞ்சி உள்ள நிலையில், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுக அதனுடைய கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டம் வாரியாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

சென்னை துறைமுகம் தொகுதி

மேலும் அதிமுகவும் இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஒரே முனைப்புடன் தன்னுடைய வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக முன்னாள் அமைச்சர் குழு மாவட்டம் முழுவதும் மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இந்த முறை திமுக அதிமுக நாம் தமிழர் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவு உள்ளது.

இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ராயபுரம் மனோ களமிறக்கப்பட்டுள்ளார். திமுக சார்ப்பில் அமைச்சர் சேகர் பாபு, தவெக சார்பில் பி.எஸ்.அசோக்,நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரிஃப் களமிறக்கப்பட்டுள்ளனர்.

திமுக 10 முறை வென்ற தொகுதி…இந்த முறை யாருக்கு?

சேகர் பாபு vs ராயபுரம் மனோ தேர்தல் போட்டி

துரைமுகத் தொகுதியை பொறுத்தவரை,வடமாநில மக்கள் கிருஸ்துவ மக்கள்,இஸ்லாமிய மக்கள் மற்றும் மீனவமக்கள் கணிசமாக காணப்படுகின்றனர்.கடந்த 2021 சட்டமன்றதேர்தலில் திமுக சார்பில்திமுக வேட்பாளராக அமைச்சர் சேகர்பாபு 59,317 வாக்குகள் பெற்றார். 58.35% எடுத்திருந்தார். இவருக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிட்ட வினோஜ் பி செல்வம் 32,043 வாக்குகள் பெற்றார்.சுமார் 27,274 வாக்குகள் முன்னிலை பெற்றும் அமைச்சர் சேகர்பாபு வெற்றி பெற்றார்.

இந்த முறை சற்று களமாறியிருக்கிறது. சென்னை துறைமுகம் தொகுதி அதிமுக வசம் வந்திருக்கிறது. அதிமுக வேட்பாளராக ராயபுரம் மனோ களமிறக்கப்பட்டுள்ளார். வடசென்னையின் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் பிறந்த இவர், ஆரம்பத்தில் மூப்பனாரின் ஆதரவாளராக செயல்பட்டார். பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி தமாகாவில் இணைந்தார். அதன் பிறகு அதிமுகவில் கழக அமைப்புச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். குறிப்பாக 2011-ல் அதிமுக வேட்பாளர் டி. ஜெயக்குமாரிடம் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார்.

சென்னை துறைமுகம் வாக்கு நிலவரம்

ராயபுரம் பகுதியில் நீண்ட காலமாக அரசியல் செல்வாக்கு கொண்டவர் என்பதாலும், மக்களிடையே அறிமுகமான முகம் என்பதாலும் இவர் “ராயபுரம் மனோ” என்றே அழைக்கப்படுகிறார். அதிமுகவில் இணைந்த பிறகு, அக்கட்சியின் வட சென்னை மாவட்ட முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகச் செயல்பட்டு வருகிறார்.சுருக்கமாகச் சொன்னால், ராயபுரம் மனோ வட சென்னைப் பகுதியின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராகவும், காங்கிரஸ் மற்றும் அதிமுக என இரு பெரும் கட்சிகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவராகவும் அறியப்படுகிறார்.

மேலும் சென்னை துறைமுகம் தொகுதியை பொறுத்தவரை திமுகவுக்கும் , அதிமுகவும் தான் போட்டி என்ற நிலை உள்ளது.இந்த தொகுதியில் திமுக அமைச்சர் சேர்கர்பாபுவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களத்தில் ராயபுரம் மனோ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்.

Source link