தூத்துக்குடியில் சிலிண்டர் வாங்க 2 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் மக்கள்

தூத்துக்குடி,

சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்தவர்களுக்கு, வீட்டிற்கே வந்து டெலிவரி செய்வது வழக்கம். ஆனால், தற்போது ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் எச்.பி. சிலிண்டர் பதிவு செய்தவர்களுக்கு லாரியில் கொண்டு வந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சிலிண்டர் பெறுவதற்காக ஆண்கள் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் தனித்தனி வரிசையில் காலி சிலிண்டர்களுடன் நிற்கின்றனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து, புதிய சிலிண்டரை வாங்கிச்செல்கின்றனர். சிலர் வரிசையில் நிற்காமல் சிலிண்டர் வாங்க முண்டியடித்துக்கொண்டு முன்னே சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு போலீஸ்காரர் அங்கு சென்று வரிசையை ஒழுங்குபடுத்தி வருகிறார்.

Source link