தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து கட்சிகளும் தொகுதிகளை பங்கீடு செய்த பின்னர் வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
ஆனால் சேலம் எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம்சார்பில் யாரும் போட்டியிடாததால் 233 தொகுதிகளில் மட்டும் தவெக களம் காண்கிறது. இதில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட உள்ளார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந் த நிலையில் தற்போது வேட்புமனுக்கள் ஏ ற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் தவெகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
விஜய் பிரச்சாரம் நடத்த அனுமதி
இதற்கிடையே பெரம்பூர் மற்றும் கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். விதிகளை மீறியும், பொது மக்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி விஜய் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறை கூறிய பாதுகாப்பு அளிக்காததால் வில்லிவாக்கம் தொகுதி ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந் து சென்னையில் ஐந்து தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் நடத்த அனுமதி கேட்டிருந்தது.
ஆனால், காவல்துறையினர் தரப்பில் இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அனுமதி அளித்தது.மேலும், ஒரு மணி நேரம் பிரச்சாரம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கியது. இதற்கு விஜய் ஆட்சேபனை தெரிவித்து பிரச்சாரத்தை ரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று தென் மாவட்டங்களை குறி வைத்து அடுத்த கட்ட பிரச்சாரத்தை விஜய் தொடங்கியுள்ள அதன் ஒரு பகுதியாக இன்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய் இன்று Road Show
இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி ,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மற்றும் ரோடு ஷோ நடத்த உள்ளதாக கூறப்படுகிறது அந்த வகையில் இன்று பிற்பகல் 3 மணி முதல் தூத்துக்குடி மாவட்டம் நகர உட்கோட்டம் மயில் பகுதியில் இருந்து விவிடி சிக்னல் வரை சாலை நிகழ்ச்சி நடத்த விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
