தென்னிந்தியாவின் முன்னேற்றத்தைத் தண்டிக்கும் பாஜக – தொகுதி மறுவரையறைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு! – this is not reform its power reengineering mk stalin slams delimitation move

இந்தியாவில் தொகுதி மறுவரையறை சார்ந்து நாடாளுமன்றத்தில் முன்மொழிக்கப்பட்டது. இது தென்னிந்தியாவில் அரசியல் ரீதியான சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் இன்றைய தினம் தொகுதி மறுவரையின் (delimitation) மூலம் தென்னிந்தியாவின் குரல்வளையை நெறிக்க வேண்டாம் என தனது சமூக வலைதள பக்கத்தில் ஒன்றிய அரசை சாடியுள்ளார்.

தொகுதி மறுவரையறை என்றால் என்ன?

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மக்கள் தொகையின் அடிப்படையில் அங்கு இருக்கும் சட்டமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதை தொகுதி மறுவரையறை ஆகும்.

தமிழ்நாடு எதிர்ப்பதன் நோக்கம் என்ன?
  • மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கடந்த 1971 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 2026 வரை மாற்றக்கூடாது என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பு சட்டப்பிரிவில் மாற்றம் கொண்டு வந்தார்.
  • அதனைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து பிரதமராகிய வாஜ்பாய் கடந்த 2001 ஆம் ஆண்டு தொகுதி மறுவரை விவகாரத்தை 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைத்தார்.
  • ஆனால் தற்போது ஒன்றிய பாஜக அரசு மீண்டும் தொகுதி வரையறை பணியில் ஈடுபட உள்ளதாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்திருக்கிறது.
  • கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் தொகை விகிதத்தை குறைக்கும் விதமாக குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளன.

இந்த செயல்பாட்டால் வடமாநிலங்களை விடவும் தென் மாநிலங்களின் மக்கள் தொகை குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக தான் தற்போது பாஜக அரசு தொகுதி மறுவறையை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் இதன் மூலம் வட இந்தியாவின் தொகுதிகளை அதிகரித்து நாடாளுமன்றத்தில் தங்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதன் மூலம் தென்னிந்தியாவை கட்டுப்படுத்த முடியும் என பாஜக நம்புவதாகவும் திமுக உள்ளிட்ட தென் மாநில அரசுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

இந்த சூழலில்தான் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கக் கூடிய முதல்வர் ஸ்டாலின் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தின் அடிப்படை அமைப்பையே திட்டமிட்டு சீர்குலைப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

  • மேலும் தொகுதி மறுவரை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்துவதற்கான முன்மொழிவு குறைந்தபட்ச அரசு அதிகபட்ச நிர்வாகம் என்ற பாஜகவின் சொந்த முழக்கத்திற்கு எதிராகவே அமைந்திருக்கிறது. இதன் முடிவு நாடாளுமன்றத்தின் செலவு கூடும் மக்களின் வரிப்பணம் வீணாகும் நாடாளுமன்ற செயல்பாடுகளின் தரம் குறையும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
  • தொகுதி மறுவரையின் மூலம் இந்திய பிராந்தியங்களை ஒன்றியமாக வரையறுக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 1-க்கு எதிரானது இந்த நடைமுறை.
  • மக்களின் குரலை புறக்கணித்துவிட்டு ஆலோசனை ஏதும் இல்லாமலே பாஜக தனித்து செயல்படுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
  • தொகுதி மறுவரையறை மூலம் பாஜக அதிகம் செலுத்தும் வட மாநிலங்களுக்கு ஆதரவு அதிகமாகி தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படும்.
  • தொகுதி வரையறை மூலம் வட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை இருமடங்கு அதிகரிக்கும். தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை 24 விழுக்காட்டிலேயே தேங்கி நிற்கும்.
  • இது மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களின் தண்டிக்கும் செயலாகும்.
  • கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்பட்டு அதிகாரம் மத்தியில் மட்டுமே குவிக்கப்படும்.
  • நாடாளுமன்றத்தில் தொகுதி மறு வரை குறித்தான விவகாரங்கள் அவசரகதியில் செய்யப்படுவது தான் லட்சத்தை அதிகரிக்கிறது.
  • பெண்களுக்கான 30 சதவீத விழுக்காடு இட ஒதுக்கீடை திமுக முழுமனதோடு ஆதரிக்கிறது என்று மாற்றுக் கருத்து இல்லை ஆனால் பொறுப்போடு செயல்பட்ட மாநிலங்களை தண்டிக்கும் வகையில் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்காமலேயே அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தான் தென்மா மாநிலங்கள் கோரிக்கை விடுப்பதாக ஒரு குறிப்பிட்டு உள்ளார்.
  • சீர்திருத்தமே அல்ல… இது அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து நாடாளுமன்றத்தை வலிமை இழக்கச்செய்து தென் மாநிலங்களை விளிம்பு நிலைக்கு தள்ளி சமூக நீதியை சிறுமைப்படுத்துவதற்கான சதித்திட்டம்.