தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்கு இது தான் காரணம்..சான்ட்னர்

மவுண்ட் மவுன்கானுய்,

நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இரு அணிகளும் டி20 உலகக் கோப்பைக்கு பின் மீண்டும் நேருக்கு நேர் மோதின.

இதற்கிடையில், இந்த போட்டிக்கான டாஸை வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீசியது.

தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் 14.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 91 ரன்கள் எடுத்தது. நியுசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் நீசம் 26 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் என்கோபானி மோகோய்னா 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 92 என்ற இலக்குடன் விளையாடியது.

தொடக்கம் முதல் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவித்தனர். இதனால் 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.கானர் எஸ்டெர்ஹுயிஸ் 45 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில் தோல்வி தொடர்பாக பேசிய நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் கூறியதாவது,

ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் கடினமாக இருந்தது. தென் ஆப்பிரிக்கா மிகவும் சிறப்பாக பந்து வீசியது, ஆரம்பத்தில் எங்களை அழுத்தத்தில் ஆழ்த்தியது. நாங்கள் 120 அல்லது 130 ரன்களை இலக்காக நிர்ணயித்து இருந்தால் , அது இரண்டாவது இன்னிங்ஸில் அவர்களுக்கு இன்னும் சில சவால்களை உருவாக்கியிருக்கலாம். விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் எதிரணியை இன்னும் கொஞ்சம் புரிந்துகொள்ள உதவும. ஐந்து ஆட்டங்கள் கொண்ட தொடரை வைத்திருக்கும்போது,ஒவ்வொரு ஆட்டமும் வீரர்களைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் விஷயங்கள் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.என தெரிவித்தார்.

Source link