தெற்கு ரெயில்வேயில் 18 கூடுதல் ரெயில்வழித்தடங்கள்.. வெளியான தகவல்

சென்னை,

தெற்கு ரெயில்வேயில் 18க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், கூடுதல் பாதைகள் அமைக்க உள்ளது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “தெற்கு ரெயில்வேயில், தமிழகம், ஆந்திரா, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில், கூடுதல் ரெயில் பாதைகளை இணைத்து, ரெயில்களின் சேவையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, காட்பாடி – விழுப்புரம் 150 கி.மீ., சேலம் -கரூர் 160 கி.மீ., ஈரோடு கரூர் 65 கி.மீ., திருச்சி – கரூர் 75 கி.மீ., விழுப்புரம் – தஞ்சாவூர் 193 கி.மீ., வழித்தடங்களில் இரட்டை பாதை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கள்ளக்குறிச்சி – உளுந்துார்பேட்டை 40 கி.மீ., ஜோலார்பேட்டை – ஓசூர் 101 கி.மீ., கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை 69 கி.மீ., புதிய பாதை திட்டங்கள் உட்பட மொத்தம் 18க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், கூடுதல் பாதைகள் அமைக்க, இறுதிகட்ட ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ரெயில்வே ஒப்புதல் பெற்ற பின், இந்த திட்டங்களை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மத்திய பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடு செய்த பின், பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினர்.

Source link