பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் நடிப்பில் அடுத்து தெலுங்கில் வெளியாக உள்ள திரைப்படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்துள்ளார்.
இந்தப் படம் வரும் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பார்த்திபன் “என்னுடைய முழுப் பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன். நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது. அதனால் இயற்கையாகவே தமிழ் சரளமாக வரும். தெலுங்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியாது. ஆனால், இந்தப் படத்தின் வெற்றி விழாவுக்கு வந்து உங்களை சந்திப்பேன். அப்போது நான் உங்களிடம் வந்து சரளமாக தெலுங்கு பேசுவேன் என்பதை இந்த மூர்த்தி உங்களுக்கு வாக்களிக்கிறான். மூர்த்தி என்பது என்னுடைய ஒரிஜினல் பெயர்.” என்று பேசியிருந்தார்.
முற்போக்குவாதியாகவும் புரட்சியும் பேசும் பார்த்திபன், ஆந்திராவில் தன்னை குறிப்பிட்ட சமூக அடையாளத்துடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பார்த்திபனின் இந்த பேச்சை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
