தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடுகிறார்

புதுடெல்லி,

அசாம், புதுச்சேரியில் வருகிற 9-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்களுடன் நாளை (திங்கட்கிழமை) பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடுகிறார். எனது வாக்குச்சாவடி, மிகவும் வலிமையான வாக்குச்சாவடி என்ற தலைப்பில் இந்த கலந்துரையாடல் நடக்கிறது.

இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் பதிவில், கடந்த 10 ஆண்டுகளில் அசாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை அனைவரும் கண்கூடாகக் காண முடியும். அனைத்துத் துறைகளிலும் அடைந்துள்ள வளர்ச்சி பாய்ச்சலுக்காகவே இந்த மாநிலம் அறியப்படுகிறது. அசாம் மக்கள் தங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளனர். அங்கு முழுமையாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறப்போகிறது.

மேலும் 5 ஆண்டுகளுக்கு, ‘இரட்டை என்ஜின்’ கொண்ட என்.டி.ஏ. அரசின் ஆட்சியை தொடர மக்கள் முழுமையாக தயாராக உள்ளனர் புதுச்சேரியை பொறுத்தவரை, கடந்த 5 ஆண்டுகளில், ‘இரட்டை என்ஜின்’ என்.டி.ஏ. அரசு. அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறை வேற்றி உள்ளது என கூறி உள்ளார்.

Source link