தேனியில் மதுக்கடைகள் நாளை மறுநாள் மூடல்

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகாவீர் ஜெயந்தியையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், தனியார் மதுபான பார்கள் அனைத்தும் நாளை மறுநாள் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

மதுவிற்பனை எதுவும் அன்றைய நாளில் நடக்கக்கூடாது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் மதுபான கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Source link