தேனி மாவட்டத்தில் 5 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி – தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்

தேனி,

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் வருசநாடு அருகே வெள்ளிமலை பகுதியில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இது ஜனநாயக திருவிழாவின் ஒரு மகுடம்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் இந்த வாக்குச்சாவடி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் ‘ஹாட் டாபிக்’காக வைரலாகி வருகிறது. ஒரே நாளில் நாடு முழுவதும் சிறப்பு பெற்ற வெள்ளிமலை வாக்குச்சாவடி குறித்த விவரம் வருமாறு:-

Also Read
ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் சேவையில் மாற்றம்
கோப்புப்படம்

தேனி மாவட்டம் வருசநாடு அருகே அடர்ந்த வனப்பகுதியில் இந்த வெள்ளிமலை எஸ்டேட் பகுதி அமைந்துள்ளது. இங்கு தனியார் எஸ்டேட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்காக அங்குள்ள எஸ்டேட் குடியிருப்புகளில் தங்கி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நாளடைவில் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்தது. தற்போது எஸ்டேட்டில் சொற்ப அளவிலேயே மக்கள் வசித்து வருகின்றனர்.

Also Read
சிலிண்டர் தட்டுப்பாடு: சமையல் கியாசை சேமிக்கும் வழிகள் என்னென்ன…?
கோப்புப்படம்

இதற்கிடையே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் தீவிர திருத்தப் பணிகள் நடத்தப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், வெள்ளிமலை எஸ்டேட்டில் 5 வாக்காளர்கள் மட்டுமே இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது அங்கு செந்தில், ஜெயராணி, பவுல், சுதா, ரோகித் ஆகிய 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

வெள்ளிமலை எஸ்டேட், அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் அங்கு வாகனங்களில் செல்ல முடியாது. இருப்பினும் ஒரு வாக்கு கூட வீணாக கூடாது என்ற உயரிய நோக்கத்தில் வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடியை அமைத்துள்ளது. அங்கு துரைச்சாமி மரகதம் தொடக்கப்பள்ளி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில்தான் ஒரு முழுமையான வாக்குச்சாவடி போன்று, தேர்தலுக்கான அனைத்து வசதிகளும் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link