சென்னை,
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 25-ம் ஆண்டு கொடி நாளையொட்டி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
கூட்டணி குறித்த அறிவிப்பை தேமுதிக உரிய நேரத்தில் அறிவிக்கும். நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி. தேமுதிக எங்கள் கட்சி; என்ன முடிவு எடுக்க வேண்டும்; எப்போது அறிவிக்க வேண்டும் என்பதை உரிய நேரத்தில் எங்கள் கழத்தை சேர்ந்தவர்களிடம் கலந்து பேசி உறுதியாக அறிவிப்பேன்.
நேரம் வரட்டும்; கூல்-ஆ இருங்க.. கூட்டணி குறித்து எங்களிடம் திரும்பத் திரும்ப கேட்காதீர்கள். திமுக-அதிமுக இரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல் தவறானது. தேமுதிக எப்படிப்பட்ட கட்சி என்று தமிழக மக்கள் அறிவார்கள்; அந்த கருத்தை சொன்னவர் எப்படிப்பட்டவர் என்பதும் மக்களுக்கு தெரியும்; அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
